தலைவர்களின் பண்பு பின்பற்றுபவர்களை உருவாக்குவது அல்ல.சிறந்த தலைவர்களை உருவாக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் உள்ள விவேகானந்தா தொழில்நுட்ப கல்லூரியின் தொழில் தகமை சான்றிதழ் கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் வே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஆத்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தஜி மகராஜ் கலந்துகொண்டனர். விசேட அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை கல்வியை பூர்த்திசெய்த மாணவர்கள் தொழில்வாய்ப்பினைப்பெற்றுக்கொள்ளும் வகையில் பல்வேறு பாடநெறிகள் இக்கல்லூரியில் நடாத்தப்பட்டுவந்தன.

ஆங்கிலம்,தகவல் தொழில்நுட்பம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பாடநெறிகள் இங்கு நடாத்தப்பட்டதுடன் அவற்றில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமது பாடநெறியை பூர்த்திசெய்து அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விவேகானந்தா தொழில்நுட்ப கல்லூரி ஊடாக தொடர்ச்சியாக வேலையற்ற இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி முன்னெடுக்கும் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொழிற் தகைமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இலங்கையில் வருடத்திற்கு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கா.பொ.சாதாரண தரம் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடைவிலகுகின்றனர்.பெருமளவான
மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லமுடியாத நிலையில் உள்ளபோது இவ்வாறான தொழில்நுட்ப கல்லூரிகள் அந்த இடைவெளியை நிரப்புகின்றன.

Batti 2019 sep தலைவர்களின் பண்பு பின்பற்றுபவர்களை உருவாக்குவது அல்ல.சிறந்த தலைவர்களை உருவாக்கவேண்டும் - மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்மட்டக்களப்பின் எதிர்கால கல்வி நிலையினை ஆய்வுசெய்தபோது மிகவும் கவலையளிக்ககூடிய வகையில் உள்ளது.எதிர்வரும் கா.பொ.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட ஆய்வில் சுமார் 38வீதமான மாணவர்களே சித்தியடையக்கூடிய நிலையில் தற்போதுள்ளனர்.

மட்;டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் 10,200 மாணவர்கள் உயர்தரம் எழுதியுள்ளனர்.பெரும் தொகையான மாணவர்கள் வெளியில்வரவுள்ளனர்.இவர்களுக்கான மாற்றுத்திட்டங்களை பாடசாலை சமூகம் செயற்படுத்தவேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் பாரிய ஒரு சிக்கலுக்குள் எமது பிள்ளைகளை தள்ளிவிடும் நிலையேற்படும்.

கல்லடி பாலம் ஒரு தற்கொலை மையமாக மாறியிருந்த காலம் இன்று மாற்றப்பட்டுள்ளது.சுமார் 77பேர் கல்லடி பாலத்தில் தற்கொலை செய்துள்ளனர். தற்போது அந்த நிலைமாற்றப்பட்டுள்ளது.

batti sep 2019 தலைவர்களின் பண்பு பின்பற்றுபவர்களை உருவாக்குவது அல்ல.சிறந்த தலைவர்களை உருவாக்கவேண்டும் - மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்24மணித்தியால கண்காணிப்பு சேவை அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்லடி பாலத்தினை ஒரு வியாபார மையமாக மாற்றுவதற்கான உடன்படிக்கையொன்று வெளிநாட்டு நிறுவனமொன்றுடன் கைச்சாத்திட்டுள்ளோம்.

எமது மாணவர்கள் ஒரு இலக்கினை நோக்கி நகராத நிலையே காணப்படுகின்றது. நாங்கள் அவர்களை ஓரு இலக்கினை நகர்த்தவேண்டும், அவ்வாறு இல்லாதவிடத்து சரியான வழிகளில் அவர்களை மாற்றமுடியாது. இலக்கு ஒன்று தெரிவுசெய்து அதனை ஓரு வாழ்க்கையாக கருதும்போதே அதில் இளைஞர்கள் வெற்றிபெறமுடியும்.

இன்று அனைவரும் அரசதுறையில் தொழில்வாய்ப்பினை எதிர்பார்க்கும் நிலையே காணப்படுகின்றது. தொழிற்சந்தையில் 80வீதமான வேலைவாய்ப்புகளை தனியார் துறை வழங்குகின்றது. 14வீதமான வேலைவாய்ப்புகளையே அரசதுறை வழங்குகின்றது.நாங்கள் இந்த
14வீதத்தினையே தேடுகின்றோம்.துறைசார்ந்த திறன்களை எங்களுக்குள் வளர்த்துக்கொள்ளாத காரணத்தினால் தொழில்சந்தையில் தோல்வியடையும் நிலையிருக்கின்றது.

அமெரிக்காவினை எடுத்துக்கொண்டால் ஒரு அரச உத்தியோகத்தர் 200 பொதுமக்களுக்கு சேவை வழங்கவேண்டும். ஆனால் இலங்கையினை பொறுத்தவரையில் ஒரு அரச உத்தியோகத்தர் 14 பொதுமக்களுக்கே சேவையாற்றவேண்டும். அந்தளவுக்கு தேவைக்கு அதிகமானோர் அரச துறையில் கடமையாற்றுகின்றனர். அங்கு வினைதிறன்,விளைதிறன் கேள்விக்குறியாகவே உள்ளது.

இலங்கையில் எதிர்வரும் ஐந்து வருடங்களில் தகவல் தொழில்நுட்பத்தில் ஐந்து இலட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளது.பாரியளவிலான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எனவே இந்த துறையில் அதிகளவான மாணவர்கள் தமது திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

IMG 9747 தலைவர்களின் பண்பு பின்பற்றுபவர்களை உருவாக்குவது அல்ல.சிறந்த தலைவர்களை உருவாக்கவேண்டும் - மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்வேலைவாய்ப்புகள் உள்ள துறையினை தெரிவுசெய்து அது தொடர்பான கற்கைநெறிகளை மேற்கொள்ளவேண்டும்.இல்லாவிட்டால் உண்ணாவிரத போராட்டங்கள் மூலமே தொழில்வாய்ப்புகளை பெறவேண்டிய சூழ்நிலையேற்படும்.

வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப துறைக்கு பங்களிக்கு செய்யவேண்டும் என்பதற்காக அண்மையில் மட்டக்களப்பு பொதுநூலகம் ஒரு கோடிரூபா செலவில் தகவல் தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த ஒரு கோடி ரூபா முதலீடு எந்தளவு பயன்படுகின்றது என்றால் அது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. நூலகம் சர்வதேச தரப்படுத்தப்பட்டுள்ளது. அதனை மாணவர்கள் பயன்படுத்தவேண்டும்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குள் 35இலட்சம் மரங்கள் கண்காணிக்கப்படுகின்றன. மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் ஒரு இலட்சம் மரங்கள் நடும் திட்டத்தின் கீழ் இதுவரையில் 17ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய இளைஞர்கள் பின்னர் அது தொடர்பில் தமது ஈடுபாட்டினை குறைத்துக்கொண்டுள்ளனர்.

இதேபோன்று மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் ஒன்லைன்மயப்படுத்தப்படவுள்ளது. அனைத்து நடவடிக்கைகளும் கையடக்க தொலைபேசி ஊடாகவே செய்யும் நிலையுருவாக்கப்பட்டுள்ளது.

IMG 9745 தலைவர்களின் பண்பு பின்பற்றுபவர்களை உருவாக்குவது அல்ல.சிறந்த தலைவர்களை உருவாக்கவேண்டும் - மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்இளைஞர்கள் உண்மைத்தன்மையினை அறிந்து தமது செயற்பாடுகளை முன்நகர்த்தவேண்டும். இங்கு தலைவர்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் சிலரின் செயற்பாடுகள் கவலைக்குரியதாக இருக்கின்றது. தலைவர்களின் பண்பு பின்பற்றுபவர்களை உருவாக்குவது அல்ல.சிறந்த தலைவர்களை
உருவாக்கவேண்டும்.தலைவர்கள் என்று கூறிக்கொண்டு இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டுசென்று, வீதிக்கு இறங்கி அவர்களை கஸ்டத்திற்குள் விடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.