தலைவர்களின் இழப்புக்களை கடந்தும் பயணிக்கும் போரட்டங்கள் – வேல்ஸில் இருந்து அருஸ்

ஹமாசின் தலைவர் யாஜா அல் சின்வர் புதன்கிழமை(16) இரவு காசாவின் ராபா பகுதியில் இஸ்ரேலிய படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ் ரேல் தெரிவித்துள்ளது.

ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று காசாவின்

 தென் பகுதியான ரபா பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றிற்குள் செல்வதை புதன்கிழமை மாலை இஸ்ரேலிய படையினரின் 828ஆவது பிஸ்லாமச் பிரிகேட் படையினர் அவதானித்துள்ளனர். அந்த கட்டடத்தின் மீது மேகாவா வகை டாங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தும்படி டாங்கிப் படையினருக்கு உத்தரவிடப்பட்டது.

டாங்கிகளின் எறிகணைத் தாக்குதலில் நான்குபேர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தப்பி கட்டடத்திற்குள் சென்றுவிட்டார். பின்னர் கட்டிடத்தை நோக்கி ஆர்.பி.ஜி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அந்த தாக்குதலின் பின்னர் கட்டிடத்திற்குள் வேறு யாரும் உள்ளனரா என்று பார்ப்பதற்காக எப்.பி.வி ரக அளில்லாத சிறிய கண்காணிப்பு விமானம் அனுப்பப்பட்டது.

அந்த விமானத்தின் காணொளியின் அடிப் படையில் இடிந்த கட்டிடத்தினுள் உள்ள கதிரையில் முகத்தை மறைத்தபடி ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலது கை டாங்கிகள் நடத்திய தாக்குதலில் காயம்பட்டு துண்டிக்கப்பட்டிருந்தது. அந்த மனிதர் தன்னை நோக்கி வரும் ஆளில்லாத விமானத்தை நோக்கி கையில் கிடைத்த தடி ஒன்றை வீசியுள்ளார். அதன் பின்னர் விமானத்தின் காணொளி பதிவாகவில்லை.

பின்னர் இஸ்ரேலிய படையினரின் கனரக சினைப்பர் அணி கொண்டுவரப்பட்டு அந்த நபரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் தலையில் சுடப்பட்டபோதும், அதன் பின்னரும் அவர் இருந்த பகுதியை நோக்கி டாங்கி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. எனவே தான் சடலம் பின்னர் கட்டட இடிபாடுகளுக்கு இடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்த சமரின் பின்னர் வியாழக்கிழமை(17) காலை தகர்க்கப்பட்ட கட்டடத்திற்குள் உள்

நுழைந்த இஸ்ரேலிய இலகு காலாட் படையி னர் சின்வரின் சடலத்தை தற்செயலாக கண்டுள்ள

னர். அதாவது இந்த மோதலின் போது சின்வரை தாங்கள் கொன்றுள்ளதாக இஸ்ரேலிய படை

யினர் அறியவில்லை. சடலத்தை தற்செயலாக கைப்பற்றியபோதே அவரை சின்வர் என சந்தேகப்பட்டதுடன்,இஸ்ரேலின் தலைமைப்பீ டத்திற்கும் தகவல்கள் பறந்துள்ளன.

அதன் பின்னர் அவசர அவசரமாக டி.என்ஏ மரபணுப் பரிசோதனை அபுகபீர் ஆய்வு நிறு வனத்தில் செய்யப்பட்ட பின்னர் அவர் இஸ்ரேலின் சிறையில் இருந்தபோது எடுக்கப்பட்ட மரபணு தகவல்களுடன் ஒப்பிடப்பட்டு அவரின் அடை யாளம் உறுதிப்டுத்தப்பட்டுள்ளது.

சடலத்தை பார்க்கும் போது தலையில் மிகப்பெரும் காயம் எற்பட்டுள்ளது. அது குறி பார்த்து சுடும் துப்பாக்கியின் சன்னம் பாய்ந்த அடையாளம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குண்டுதுளைக்காத அங்கியுடன், இராணுவ உடையில் துப்பாக்கி சகிதம் அவர் இறந்துள்ளார். அவரிடம் இருந்து ஆயுதங்களும் சிறிய ரோச் லைற் மற்றும் சிறிதளவு பணம் என்பன மீட்கப்பட்டுள்ளது. அவர் எப்பவும் வைத்திருக் கும் Glock 19 கைத்துப்பாக்கியும் அங்கு காணப் பட்டுள்ளது.

1997 ஆம் ஆண்டு முதல் ஹமாஸின் கட்டளைத் தளபதியாக பணியாற்றி அவர் சில மாதங்களுக்கு முன்னர் ஈரானில் வைத்து ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்ட பின்னர் அவரின் இடத்திற்கு சின்வர் நியமிக்கபபட்டிருந்தார்.

இஸ்மாயில் போல் வெளிநாடுகளில் வாழ் க்கை நடத்தாது, காசா பகுதியில் தங்கியிருந்து தாக்குதல்களை வழிநடத்தியவர் சின்வர், கடந்த வருடம் ஒக்டோபர் 7 ஆம் நாள் இடம்பெற்ற தாக்குதலையும் அவரே திட்டமிட்டு நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்து வருகின்றது.

சின்வரின் மரணத்தை அமெரிக்காவின் வெள்ளைமாளிகை உறுதிப்படுத்தியதுன், இஸ் ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகுவும் அதனை கொண்டாடியுள்ளார். சின்வரின் மரணம் காசா போரை முடிவுக்கு கொண்டுவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சின்வரின் மரணத்தை ஒசாமா பின்லேட னின் மரணத்துடன் ஒப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹமாஸ் இல்லாத காசா உருவாகும் என தெரிவித்துள்ளார். சின்வர் இறந்தது உறுதியானது என பிரித்தானியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜோன் ஹெலியும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், சின்வர் பணயக் கைதிகளின் பின்னால் மறைந்து வாழவில்லை எனவும், பதுங்கு குழிக்குள் பதுங்கியிருக்கவில்லை என வும், அவர் இராணுவ உடை தரித்து எதிரியுடன் போரிட்டு மரணத்தை தழுவியுள்ளதாக சயீட் சியாட் என்ற அல்ஜசீரா ஊடகத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சினவர் 1962 ஆம் ஆண்டு காசாவில் உள்ள கான் யூனிஸ் அகதி முகாமில் பிறந்தவர். 1987 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு உருவாகியபோது அதன் முன்னனி உறுப்பினர்களில் அவரும் ஒருவர்.

அதன் பின்னர் அவர் ஹமாஸின் தாக்குதல் படையணியான குசாம் பிரிகேட்டில் இணைந்து போரிட்டிருந்தார். இஸ்ரேல் மீது தற்கொலைத் தாக்குதல்கள், றொக்கெட் தாக்குதல்கள் பலவற்றை நடத்தியதில் சின்வரின் பங்கு அதிகம்.

இஸ்ரேலிய உளவாளிகளை கண்டறிந்து தாக்கி அழிப்பதில் கைதேர்ந்தவர். 1988 ஆம் ஆண்டு அவர் இஸ்ரேலினால் கைது செய்யப்பட்டு நான்கு ஆயுள் தண்டனைகள் பெற்று சிறையில் இருந்தவர். பின்னர் 2011 ஆம் ஆண்டு கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் காசா சென்ற அவர் ஹமாஸின் நிர்வாகத்தை அங்கு பலப்படுத்தியிருந்தார். 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா அவரை பயங்கரவாதியாக அறிவித்திருந்தது. 2017 ஆம் ஆண்டு அவர் ஹமாஸின் தலைவராக பொறுபேற்றிருந்தார். அமைப்புக்குள் நம்பகத்தன்மை மற்றும் விசு வாசத்தை எற்படுத்தியதில் அவரின் பங்கு முக்கிய மானது.

ஓக்டோபர் 7 ஆம் நாள் இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் அனைத்துகல குற்றவியல் நீதிமன்றம் அவர் மீது பிடிவிறாந்து பிறப்பித்திருந்தது.

இந்த இழப்பு ஹமாஸிற்கு பெரும் இழப்பாகவே இருக்கும், ஆனால் அவர்களுக்கு தலைவர்களை இழப்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல. என்பதால் போர் நிறைவுபெறுவதற்கான அறிகுறிகள் இல்லை என்பது ஒருபுறம் இருக்க போர் மேலும் தீவிரமடையும் சாத்தியங்களே அதிகமாக உள்ளது.

ஜோ பைடன் கூறுவது போல ஒசாமா பின்லாடனை அமெரிக்கப்படையினர் அழித்திருந்

தாலும், ஆப்கானிஸ்தானில் பெரும் அழிவுகளை அமெரிக்கப்படையினர் 20 வருடங்கள் மேற் கொண்டிருந்தாலும், இறுதியில் வெற்றிபெற்றது தலிபான்கள் தான். அந்த 20 வருடங்களில் இரண்டு தலைவர்களை தலிபான்களும் இழந்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.