இலங்கை – இந்திய கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்காக தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது.
37 வருடங்களின் பின்னர் 1800 மில்லியன் ரூபா செலவில் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
புனரமைக்கப்படவுள்ள தலைமன்னார் இறங்குதுறையை துறைமுகங்கள், கப்பல்துறை விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (04) சென்று பார்வையிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், கடற்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போது, இந்தி சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதன் மூலம் வடக்கு அபிவிருத்தியடையும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
News First