Tamil News
Home செய்திகள் தமிழ் மொழி மேம்பாட்டின் அவசியம்-விக்கிரமன்

தமிழ் மொழி மேம்பாட்டின் அவசியம்-விக்கிரமன்

இலத்திரனியல் உபகரணங்கள், நவீன தொடர்பூடக பாவனையில் உள்ள ஆங்கில பதங்களுக்கிணையான பெருமளவு  கலைச்சொற்கள் இன்னமும் அங்ககீகரிக்கப்பட்ட அமைப்பு அல்லது பல்கலை கழகங்களால் தொடராக  வெளியிடப்படவில்லை அல்லது மக்கள் கவனத்திற்கும் பார்வைக்கும் கொண்டுவரப்படவில்லை.

உதாரணத்துக்கு Tablets /Tab ஐ “வரைவு இலக்கமாக்கி” அல்லது
“வரைபட்டிகை” என ஒரு இணையத்தளம் வரையறுக்கிறது.  ஆனால் ஆங்கிலத்தில் அச்சொல் எழுத்துருக்களை பதிவிட பயன்படும் களிமண் தட்டு என உள்ளது.  பழங்கால களிமண் தட்டுகளின் வடிவில் அமைந்ததால் ஆப்பிள் நிறுவனம் அதை Tablet என பெயரிட்டிருக்கலாம்  எனவே இப்போ நாம் அதை “தொடுதிரை தட்டு” என அழைக்கலாமா?

இவ்வாறான முயற்சிகளை தமிழ் பேராசிரியர் கொண்ட குழுவொன்றை அமைத்து கலைச்சொற்களை ஆக்கி, ஒருங்கிணைந்த தமிழ் பல்கலை கழகங்களின் மொழிவள மேம்பாட்டு பிரிவு ஒன்றின் அங்கீகாரத்துடன் உலக அரங்கில் பரப்ப வேண்டியதும் தமிழ் மொழியினதும் தமிழ்  தேசிய வளர்ச்சியினதும் இருப்பிற்கும் மேம்பாட்டுக்கும்  தேவையாக உள்ளது.
மொழி பேராளர்களே உங்கள் கவனத்தையும்  செயல் வடிவாக்கத்தையும் எம்மினம் வேண்டி நிற்கிறது.

Exit mobile version