தமிழ்ப் பொதுவேட்பளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு தவறாது தமிழர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரன் நேற்று (14) சனிக்கிழமை திருகோணமலை மறைமாவட்ட ஆயரை நேரில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பலரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்ற சூழ்நிலையில் தமிழ் மக்கள் சார்பாக பா.அரியநேத்திரன் பொது வேட்பாளராக போட்டியிடுகிறார். வடக்கு கிழக்கு மக்களின் பல்வேறு சிந்தனைகளக், தேவைகளை, கஸ்டங்களை முன்வைத்து பல புத்திஜீவிகள் இணைந்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் உச்சமாக இந்த அமைப்பு உருவாகி இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்காது, மனச்சாட்சிபடி, வட கிழக்கி தமிழ் மக்களின் நலனுக்காக எதிர்காலத்துக்காக 500தவறாது சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.