Tamil News
Home செய்திகள் தமிழ் மக்களுடைய போராட்டம்,சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிரானது-சட்டத்தரணி சுகாஸ்

தமிழ் மக்களுடைய போராட்டம்,சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிரானது-சட்டத்தரணி சுகாஸ்

தமிழ் மக்களுடைய போராட்டம் பௌத்தத்திற்கோ சிங்கள மக்களுக்கோ எதிரானது அல்ல. மாறாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டமாகும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்தத்திற்கு ஆபத்து மோசமான விளைவுகள் ஏற்படலாம் என அஸ்கிரிய பீட பிரத்திப் பதிவாளர் கூறிய விடையம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய தனியார் காணிகளை ஆக்கிரமித்து தமிழர் தாயகத்தின் வடகிழக்கு எங்கும் மிக அண்மைக் காலத்தில் தீவிரமாக அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைகளுக்கும் தொல்லியல் திணைக்களத்தின்  செயற்பாடுகளுக்கும் எதிராகவே தமிழ் மக்கள் போராடி வருகின்றார்கள். தமிழ்மக்களின் போராட்டம் சிங்கள மக்களுக்கே பௌத்தமதத்திற்கோ எதிரானது அல்ல என்பதை ஆரம்பம் முதல் இதனை வெளிப்படுத்தி வருகின்றோம்.

ஆனால், சரியாகப் புரிந்து கொள்ளாது வணக்கத்துக்குரிய அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்தவர்களும் மிக மோசமான இனவாதி என்று கூறப்படுகின்ற விஜயசேகர போன்றவர்களும் தொடர்ச்சியாக தமிழ் மக்களுடைய நியாயபூர்வமான போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

வணக்கத்துக்குரிய அஸ்கிரிய  பீடத்தைக் சேர்ந்த மகாநாயக்க தேரர்களுக்கு  கூறுகின்ற விடயம் என்னவென்றால் நாங்கள் விகாரைகள் சிங்கள மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளிலே அல்லது சிங்கள மக்களின் வணக்க ஸ்தலங்களில் அமைக்கப்படுவதை எதிர்க்கவில்லை. மாறாக தமிழர் தாயகத்தில் குறிப்பாக வலிகாமம் வடக்கு தையிட்டியில் ஒரு சிங்களக் குடும்பம் கூட கிடையாது.

அதேபோல் குறுந்தூர் மலையை எடுத்துக் கொண்டால் அங்கும் ஒரு சிங்களக் குடும்பமும் கிடையாது இவ்வாறாக தமிழர் தாயகப் பகுதியை திட்டமிட்ட வகையில் ஆக்கிரமிக்கின்ற விகாரைகளையே நாங்கள் எதிர்க்கின்றோம் இது தமிழ் மக்களுடைய இருப்போடு சம்பந்தப்பட்ட விடையம் அது மட்டுமன்றி சரத் வீரசேகர கூறுகின்றார்.

இராணுவத்தினர் வழிபடுவதற்கு விகாரைகள் தேவை வடக்கு கிழக்கு தாயப் பகுதியின் மூன்றில் இரண்டு பகுதியை இராணுவத்தினரே ஆக்கிரமித்திருக்கின்றார்கள். அவ்வாறு என்றால் தமிழர் தாயகப் பகுதியை ஆக்கிரமித்து  இருக்கின்ற இராணுவத்தினருக்கு  மூன்றில் இரண்டு பகுதியில் விகாரைகள் கட்டினால் தமிழ் மக்களுடைய எண்ணிக்கையை விட விகாரைகளே அதிகமாக இருக்கும் சரத் வீரசேகர போன்றவர்களின் முட்டாள் தனமான கருத்துக்களுக்கு பதில் அளிப்பது எங்களுடைய நேரங்களை வீண்விரையம் செய்வதாகவே கருதுகின்றோம்.

மதிப்பார்ந்த அஸ்கிரியபீட மகாநாயகளுர்க்கு நாம் கூறிக் கொள்வது தமிழ் மக்களுடைய போராட்டம் பௌத்தத்திற்கோ சிங்கள மக்களுக்கோ எதிரானது அல்ல மாறாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டமாகும் இதனை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.

Exit mobile version