தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி யாழ்.நகரில் களமிறக்கப்பட்டுள்ளது

264 Views

யாழ். நகரில் தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் படையணியினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மோட்டார் சைக்கிளில் பவனி வருவதுடன், கடைகள், பொது இடங்களில் நிற்கும் பொது மக்கள், வாகன ஓட்டிகளிடம் தமிழில் பேசியும் வருகின்றனர்.

Capture 4 தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி யாழ்.நகரில் களமிறக்கப்பட்டுள்ளது

வாகன ஓட்டிகளிடம் சரியாக முகக்கவசம் அணியும்படியும், வாகனங்களில் ஏற்றுபவர்களை முகக் கவசம் அணியும்படி கூறும்படியும் தமிழில் தெரிவிக்கின்றனர்.

Capture 3 தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி யாழ்.நகரில் களமிறக்கப்பட்டுள்ளது

வர்த்தக நிலையங்கள், பொது இடங்களில் நிற்கும் பொது மக்களிடம் முகக்கவசம் அணியும்படியும், ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணும்படியும் தமிழில் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply