தமிழ் அகதி குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு பாரப்பட்சமாக நடத்தியதாக குற்றச்சாட்டு

353 Views

தமிழ் அகதி குழந்தைகளை பாரப்பட்சமாக நடத்தியதாக அவுஸ்திரேலிய அரசு மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய National கட்சியின் தலைவராகவும் துணைப் பிரதமராகவும் மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னதாக கருத்து வெளியிட்ட Barnaby Joyce, பிரியா குடும்பத்தை அரசு நடத்தும் விதம் தொடர்பில் விமர்சனத்தை வெளியிட்டதுடன், அவுஸ்திரேலியாவில் பிறந்த இரு பெண் குழந்தைகளுக்கும் Jane மற்றும் Sally என்ற பெயர்கள் இருந்திருந்தால் அவர்களை வேறொரு நாட்டிற்கு அனுப்புவதற்கு அரசு முனைந்திருக்காது என சாடியிருந்தார்

ஆனால் Barnaby Joyce-இன் கருத்து நியாயமற்றது எனவும் தவறானது எனவும் குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார்.

இந் நிலையில், அவுஸ்திரேலியாவில் காலவரையின்றி தடுப்பில் வைக்கப்பட்டதாக பெடரல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட சிரிய அகதி, உயர்நீதிமன்றம் புதிதாக வழங்கியுள்ள மாறுப்பட்ட தீர்ப்பினால் மீண்டும் சிறைப்படுத்தக்கூடிய ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.

அவுஸ்திரேலிய அதிகாரிகளால் அந்த அகதி சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டார் எனும் பெடரல் நீதிமன்ற தீர்ப்பினை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

“இந்த தீர்ப்பு பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரின்(அகதி) விடுதலை ஆபத்தில் உள்ளது,” எனக் கூறியிருக்கிறார் சிரிய அகதியின் வழக்கறிஞரான அலிசன் பேட்டிசன்.

Leave a Reply