தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணியா: டில்வின் சில்வா கருத்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பி.யின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்  கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவளிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இதன்படி, அந்த தரப்பினர் சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவளித்தனர். எனவே, தேர்தல் தொடர்பில் அவர்களுடன் எந்தவித கலந்துரையாடலிலும் தற்போது ஈடுபடவில்லை என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.