Tamil News
Home செய்திகள் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு போராட்டம்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு போராட்டம்

கடந்த வியாழக்கிழமை(31) அன்று பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி, ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம்  பல ஐரோப்பிய நாடுகளின் ஊடாக பயணித்துக்கொண்டு இருக்கின்றது.

2009ம் ஆண்டு தமிழீழ தேசத்தில் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதும் தமிழர்களின்  போராட்ட வடிவம் இக்கால கட்டத்தின் தேவைப்படி அறவழிக்களமாக உருப்பெற்றது.  அந்தவகையில் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேவையின் 54வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பமாகியுள்ளது.

மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டத்தில் கலந்துகொண்டு மனித நேய செயற்பாட்டாளர்களுக்கு மக்கள் ஒன்றிணைந்து எழுச்சியோடு வரவேற்கவேண்டும்.

எதிர்வரும் 54 வது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரிலே வாழிட நாடுகள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து  தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை  அவசியம் என்னும் நிலைப்பாட்டினை ஏற்க நாம் அயராது போராட வேண்டும்,  அதற்கமைய எம் உறவுகளே உங்களுடைய வாழிட நாடுகளை எமது நியாயமான கோரிக்கை செவிசாய்க்க வைப்பது எம் அனைவரினதும் வரலாற்று கடமையாகும் எனவே எம் விடுதலைப் பங்களிப்பினை ஆற்ற வாருங்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version