இலங்கையில் நடைபெற்ற பொதுத் தோ்த லில் ஆச்சரியமான பல நிகழ்வுகள நடந்துள்ளன. முதல் முறையாக தனியான ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கைப்பற்றியிருக்கின்றது. தென்னிலங்கைக் கட்சி
கள் எதுவும் கைப்பற்ற முடியாது என்று கருதப் பட்ட வடமாகாணத்தை தேசிய மக்கள் சக்தி தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கின்றது.
தனியொரு கட்சியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி பெற்றிருப்பது முக்கியமானது. ஜனாதி
பதிக்கு இருக்கக்கூடிய நிறைவேற்று அதிகாரத் துக்கும் மேலாக, இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை, தமது நிகழ்ச்சி நிரலை தடையின்றி முன்னெடுக்கக்கூடிய அதிகாரத்தை அரசாங்கத்துக்குக் கொடுத்திருக்கின்றது.
இதனைவிட, வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு – கிழக்கில் தென்னிலங்கை யைத் தளமாகக் கொண்ட கட்சி ஒன்று ஆதிக்கத்தைச் செலுத்தியிருக்கின்றது. வடக்கு கிழக்கு ஏதோ ஒரு தமிழ்த் தேசியக் கட்சியின் ஆதிக்கத்தின் கீழ்தான் இருந்திருக்கின்றது என்ற வரலாறு மாற்றப்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் எவற்றினதும் ஆதரவின்றி வடக்கில் முன்னணிக் கட்சியாக தேசிய மக்கள் சக்தி வந்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் அதிக வாக்குகளையும், அதிக ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்திதான் பெற்றிருக்கின்றது. அதேபோல, கிழக்கில் திரு மலையும், அம்பாறையும் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் அவா்களால் வெற்றி பெற முடியவில்லை.
சிங்கள மக்களைப் போலவே தமிழ் மக்களும் மாற்றம் ஒன்றை விரும்புகின்றாா்கள். அதனைத் தமிழ்த் தலைமைகளும் புரிந்து கொண்டிருந்தாா்கள். அதனால்தான், அந்த மாற்றத் தைக் கொண்டுவரக்கூடியவா்கள் தாமே எனச் சொால்லிக் கொண்டு சில தமிழ்க் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியிருந்தன. போா் முடிவுக்கு வந்து கடந்த பதினைந்து வருட காலத்தில் வடக்கு – கிழக்கில் மக்கள் எதிா்பாா்க்கும் மாற்றம் எதனையும் கொண்டுவராத தமிழ்க் கட்சிகளை மக்கள் நிராகரித்துவிட்டனா்.
தமிழ்த் தலைமைகள் மீது மக்களுக்கு இருக்கின்ற சீற்றம், அதிருப்தி என்பனதான் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் மக்களுடைய பாா்வை திரும்பியதற்குக் காரணமாக இருந்தது. தமிழ்க் கட்சிகளிடையிலான போட்டி, பிளவுகள், உட்கட்சி மோதல்கள் என்பன மக்களுக்கு தமிழ்க் கட்சிகளின் மீது அதிருப்தியை அதிகரித்திருந்தது. மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி அவா்கள் முன்னெடுக்கும் சுயநல செயற்பாடுகளும், இவா்களுக்கு நாம் பாடம் படிப்பிக்க வேண்டும் என மக்கள் தீா்மானித்தமைக்கு காரணம்.
இந்த நிலையில் அவா்களுக்கு இருந்த ஒரே தெரிவு தேசிய மக்கள் சக்தியாக இருந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி கூட, இவ்வாறான பிரமாண்டமான ஒரு அங்கீகாரம் தமிழ்ப் பகுதிகளில் தமக்குக் கிடைக்கும் என்பதை எதிா்பாா்த்திருக்கமாட்டாா்கள்.
தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான போட்டிகளும், வேட்பாளா் நியமனம் கிடைக்க வில்லை என்பதற்காக சுயேட்சைக் குழுக்களை அமைப்பது, அல்லது கட்சி தாவுவது மற்றும் உள்வீட்டுக் குழப்பங்களும் யாழ்ப்பாணத்தில் அதிகமாக இருந்தது. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத் தியிருந்த நிலையில், மாற்றுத் தலைமை ஒன்றைத் தேட வேண்டிய நிா்ப்பந்தம் அவா்களுக்கு ஏற்பட்டது. அதன் விளைவாகத்தான் யாழ். தோ்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி மூன்று ஆசனங்களைப் பெற்றது.
ஜனாதிபதித் தோ்தலின் போதும் அநுர அலை தென்பகுதியில் அடித்தது. அது வடக்கு, கிழக்கில் பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சஜித் பிரேமதாச ஆதரவே வடக்கு, கிழக்கில் அதிகமாக இருந்தது. இரண்டு மாதங்களுக்குள் இந்த நிலை அதிரடியாக மாறிவிட்டது.
பொதுத் தோ்தலுக்கான வேட்பாளா் தெரிவின்போது காணப்பட்ட குத்துவெட்டுக்கள், தமிழ்த் தேசியத்தின் பெயரால் எந்தளவுக்கு சுயநல அரசியலை தலைமைகள் செய்கின்றன என்பதை அம்பலமாக்கியது. ஆசன ஒதுக்கீட்டில் தமிழரசுக் கட்சித் தலைமை நடந்துகொண்ட முறை, மாம்பழம் சின்னத்தில் புதிதாக ஒரு சுயேட்சைக்குழு களமிறங்க வழிவகுத்தது. அந்த சுயேட்சைக் குழுவின் வரவு “திசைகாட்டி” மேலும் ஒரு ஆசனத்தை யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே உதவியது.
யாழ் மற்றும் வன்னித் தோ்தல் மாவட் டங்களில் ஒரே அணியாக தமிழ்த் தேசியக் கட்சிகள் களமிறங்கியிருந்தால், கள நிலையை மாற்றியிருக்க முடியும்.
தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் அதே வேளையில், தமிழ்த் தரப்பு பலவீனமாக இருப்பதால், எதிா்காலத்தில் தமிழ்த் தேசிய அபிலாஷைகளை எவ்வாறு பூர்த்தி செய்யப் போகிறோம் என்ற கேள்வி முக்கியமாக எழுகிறது. புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவரப்போவதாக ஜனாதிபதி அநுரகுமார கூறியிருந்தாா். அவரது தோ்தல் விஞ்ஞாபனத்திலும் அது இடம்பெற்றிருந்தது.
அதற்கான அங்கீகாரத்தை ஜனாதிபதித் தோ்தலின் போது மக்கள் அவருக்கு வழங்கி யிருக்கின்றாா்கள். அதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பெரும்பான்மை இப்போது அவா்களுக்கு கிடைத்துள்ளது. அதனால், அதற்கான முயற்சிகளை அவா்கள் முன்னெடுப் பாா்கள். இதனை எதிா்கொள்வதற்குத் தேவையான பலத்துடன் தமிழ்த் தரப்பு இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொறுத்த வரையில் இப்போது தமிழரசுக் கட்சி எட்டு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒன்று, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்று என்ற வகையில் அவா்களது பாராளுமன்ற பலம் குறைவடைந்திருக்கின்றது. தமிழ்ப் பகுதி களில் தேசிய மக்கள் சக்தியின் அதிகாரமே மேலோங்கியிருப்பதால், தமிழ்க் கட்சிகளின் எதிா்காலத்தைத் தீா்மானிப்பவராக அநுரவே இருப்பாா். தமிழ் மக்களின் எதிா்பாா்ப்புக்களை நிறைவேற்றக் கூடிய வகையில் அவரது செயற்பாடுகள் அமையுமாயின், அடுத்த தோ்தலில் தமிழ்க் கட்சிகள் இதனைவிட இன்னும் மோசமான பின்னடைவை எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.
தமிழரசுக் கட்சி தனித்து எட்டு ஆசனங் களைப் பெற்றிருப்பது முக்கியமானது என்று எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கின்றாா். ஆனால், வடக்கில் தமிழரசு படு தோல்வியைச் சந்தித்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் தோல்வியடைந்திருக்கின்றாா். வன்னியில் கட்சி யின் செயலாளா் மருத்துவா் ப.சத்தியலிங்கம் வெற்றி பெறவில்லை. கடந்த காலத்தில் தமிழரசுக் கட்சியின் நகா்வுகளைத் தீா்மானிப்பதில் இந்த இருவருமே முக்கியமானவா்களாக இருந்துள் ளாா்கள். அந்தவகையில், இந்த இருவரது தோல்விகளும் கட்சியின் கடந்த காலச் செயற்பாடுகளில் மக்களுக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்துபவையாகவே பாா்க்கப்பட வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசை தமிழ்த் தலைமைகள் எவ்வாறு கையாள வேண்டும் என்ற கேள்வி இன்று பிரதானமாக எழுகின்றது. ஜே.வி.பி.யிலிருந்த வந்த தெசிய மக்கள் சக்தி ஒரு சிங்களத் தேசியவாதக் கட்சி. இந்தத் தோ்தலின் போது அதனை அவா்கள் முன்னிலைப்படுத்தவில்லை. கடந்த 2015 – 2019 காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பாக்க முயற்சியைத் தொடரப் போவதாகவே அவா்கள் கூறுகின்றாா்கள்.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அநுர அரசு பெற்றிருப்பதும், சிங்கள இனவாதிகள் இத்தோ்தலில் மோச மாகத் தோற்கடிக்கப்பட்டிருப்பதும், இன நெருக் கடிக்கு நியாயமான தீர்வை வழங்கக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை முன் னெடுப்பதற்காக வாய்ப்பை புதிய அரசாங்கத்துக்கு கொடுத்திருக்கின்றது. அதனை அவா்கள் பயன்படுத்துவாா்களா? அதற்கான அழுத்தத்தை தமிழ்க் கட்சிகள் கொடுக்குமா?