தமிழர்களின் உணவுப்பழக்கம் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது- மூத்த விஞ்ஞானி

386 Views

தமிழக உணவுகளில் சேர்க்கப்படும் ரசம் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுவதாக விஞ்ஞானி டாக்டர் டி.மாரியப்பன் கணித்துள்ளார்.

மருத்துவ ஆராய்ச்சிக்கான வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில்(VCRC: Vector Control Research Center ) மூத்த இந்திய துணை இயக்குநராக உள்ள விஞ்ஞானி டாக்டர் டி.மாரியப்பன் கூறியதாவது: இந்தியர்கள் உட்பட தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்தவர்கள் பரம்பரை ரீதியாக நன்கு பாதுகாக்கப்பட்டவர்கள். அவர்கள் வைரஸ் நோய்களுக்கு எதிராக போராட வலுவான சக்திவாய்ந்த மரபணுக்களை கொண்டுள்ளனர்.

2003ல் சார்ஸ் வைரஸ் வெடித்தபோது மற்ற நாடுகளில் ஏராளமான பாதிப்புகள் இருந்தன. ஆனால் இந்தியா சிறிய அளவிலேயே பாதிக்கப்பட்டிருந்தது. நேஷனல் ஒப் ஸ்டிடியூட் ஒப் கம்யூனிகபிள் டிசைஸஸ் வெளியிட்ட குறிப்பின்படி ஏப்ரல் 9 2003 வரை இந்தியாவில் சார்ஸால் பாதிக்கப்பட்டதாக எதுவும் பதிவாகவில்லை. மேலும் கோவிட்-19 மற்றும் SARS CoV-2 வைரஸ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது.

சில நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவதில் உணவுப் பழக்கமும் ஒரு பங்கு வகிக்கிறது. தென்னிந்தியாவில் நம் உணவில் ‘ரசம்’ சேர்த்து வருகிறோம். அதில் அன்றரி ஒக்சைட் கொண்ட பூண்டு மிளகு வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுவதால் அவை நுரையீரலை பாதுகாக்கின்றன.

இது பல வைரஸ் நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகிறது. இந்த ரசம் பல ஆண்டுகளாக நம் உணவில் சேர்க்கப்படுகிறது என்றார்.

Leave a Reply