தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிறீலங்கா: போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாளர் தூதுவர்

சிறிலங்கா தொடர்பிலா ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானத்தில் இருந்து சிறிலங்கா வெளியேறியிருந்தாலும், இப்போதும் சிறிலங்காவை கட்டுப்படுத்தும் ஒர் தீர்மானமாகவே அது உள்ளதோடு, சிறிலங்கா அதற்கு கட்டுப்பட வேண்டிய நிலையில் உள்ளதென போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாளர் தூதுவர் ஸ்ரிபன் ராப் தெரிவித்துள்ளார்.

இணையவழியூடாக தொடங்கியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில், சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே இக்கருத்தினை தெரிவித்திருந்த தூதுவர் ஸ்ரீபன் ராப், சிறிலங்கா உலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படும் நிலையில் உள்ளதென தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் பல உலகளவில் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். சர்வதேச சட்டங்களை மீறி குற்றங்களை புரிகின்றவர்கள் தண்டிக்கப்படுவர் என பண்பாட்டை வளர்க்க வேண்டிய தேவையுள்ளது. இதற்கு கட்டுப்படாமல் சிறிலங்கா இருப்பதனை நம்மால் ஏற்கமுடியாது. சிறிலங்காவில் போர்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் கூண்டில் ஏற்றப்படாமை, தண்டிக்கப்படாமை ஓர் தவறான சமிக்ஞையாக சிறிலங்காவுக்கு இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.