தனிநாட்டுக்கான பொகேயின்வில் வாக்கெடுப்பு அமோக வெற்றி;ஆனால் தனிநாடாகுவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம்

440 Views

ஏற்கனவே ஓரளவு சுயநிர்ணய உரிமையுள்ள பொகேயின்வில் தீவுகள், பப்புவா நியூகினியிலிருந்து பிரிந்து, தனிநாடு தேவையா என்ற வாக்கெடுப்பில் பெரும்தொகையாக தனிநாடு என்பதையே தெரிவு செய்துள்ளார்கள். உலகின் புதிய ஒரு நாடாக பொகேயின்வில் தீவு தொகுதிகள் மாறலாம்.

பொகேயின்வில் தனிநாட்டுக்கான ஆயுத போராட்டத்தில் 200,000 மக்கள் தொகையை கொண்ட இத்தீவுதொகுதியில் 20,000 மக்கள் கொல்லப்பட்டார்கள்.

20 ஆண்டுகளாக காத்திருந்த இத்தீவுகளில் வாழும் 180,000 மக்கள் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றினார்கள். இவர்களில் 98 வீதமானோர் தனிநாட்டுக்கே வாக்குப் போட்டார்கள். வாக்கெடுப்பு முடிவுகளை அறிவித்ததும் மக்கள் மகிழ்ச்சியில் பாடியாடினார்கள்.

இருப்பினும், உடனடியாக பொகேயின்வில் தனிநாடாக மாறமாட்டாது. ஏனெனில் வாக்கெடுப்பு முடிவுகளை பப்புவா நியூகினி மதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒப்பந்தத்தில் இல்லை. பப்புவா நியூகினி மற்றும் பொகேயின்வில் தலைமைகள் சேர்ந்து பேசச்சுவார்த்தைகள் நடத்தியே இதை இனி முன்னெடுக்க வேண்டும். இறுதி முடிவு பப்புவா நியூகினி அரசின் கையிலேயே உள்ளது.

வாக்கெடுபபு முடிவுகளை அறிவித்த பப்புவா நியூகினியின் பொகேயின்வில்லுக்கான அமைச்சர் முடிவுகள் நம்பக் கூடியவை என்றும் இருப்பினும் இதை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் பப்புவா நியூகினி இல்லை என்பதையும் மக்களுக்கு நினைவுபடுத்தினார்.

நன்றி கார்டியன் செய்திகள்

பொகேயின்வில் தொடர்பான மேலதிக விடயங்களைத் தெரிந்துகொள்ள ‘பொகேயின்வில் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு நவம்பர் 23; ஒரு வரலாற்றுப் பார்வை (1930-1988)’ என்ற கட்டுரை பயனுள்ளதாக அமையும்.

http://www.ilakku.org/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%95%e0%af%87%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/

 

Leave a Reply