தடை உள்ள போதும் 12 வெளிநாட்டுக் கப்பல்களை அனுமதித்த இலங்கை!

வெளிநாட்டு கப்பல்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும், இந்த ஆண்டு குறைந்தபட்சம் 12 வெளிநாட்டு கப்பல்களை இலங்கை தனது துறைமுகங்களில் நிறுத்துவதற்கு பாதுகாப்பு அனுமதியை  வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 1, 2024 முதல், இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்புக் கவலைகள் காரணமாக, குறிப்பாக மேம்பட்ட

சீனக் கண்காணிப்புக் கப்பல்களின் வருகை ஆராச்சி என்ற பெயரில் இலங்கை கடற்பரப்புக்குள் நிற்பதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தது. அமெரிக்காவும் சீன ஆராச்சி கப்பல்கள் குறித்து தனது கவலையை வெளியிட்டிருந்தன.

இதையடுத்து வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களை நாட்டிற்குள் நிறுத்துவதற்கு இலங்கை ஒரு வருட கால தடை விதித்திருந்தது.

ஆனாலும் இதுவரை,  12 வெளிநாட்டுக் கப்பல்களை தனது துறைமுகங்களில் நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளது என்று தகவல் பெளியாகியுள்ளது.

அண்மையில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலான (INS) ஷல்கி, ஆகஸ்ட் 2 அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

ஆனால் 2023ஆம் ஆண்டுக்குப் பின், இந்த ஆண்டு எந்த சீனக் கப்பல்களும் இலங்கைக்கு வரவில்லை என்று கூறப்படுகின்ரது.

தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் கடந்த வருடம் 32 வெளிநாட்டு கப்பல்கள் இலங்கையில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் இந்தியாவிலிருந்து 12 கப்பல்களும், அமெரிக்காவிலிருந்து ஐந்து கப்பல்களும், ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து தலா மூன்று கப்பல்களும்  அடங்கும்.

மேலும், பிரான்ஸ், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து தலா இரண்டு கப்பல்களும், அல்ஜீரியா, இங்கிலாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று கப்பல்களும் 2023 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை இலங்கைத்  துறைமுகங்களுக்கு வந்துசென்றுள்ளன.

இந்த நிலையில், வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களை அனுமதிப்பதை அடுத்த ஆண்டு மீண்டும் தொடங்கும் என  அமைச்சர் அலி சப்ரி அண்மையில்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.