டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸூம் போட்டியிடுகின்றனர். தான் ஆட்சி அமைத்தால், தன்னுடைய நிர்வாகத்தில் எலான் மஸ்க்கிற்கு பதவி வழங்குவேன் என்று ட்ரம்ப் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார். சேவை செய்ய தயாராக இருப்பதாக எலான் மஸ்க்கும் பதிலளித்துள்ளார்.