டென்மார்கில் செயற்கை தீவு திட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்

35,000 பேர் தங்குவதற்கான வீடு மற்றும் கோபன்ஹேகன் துறைமுகத்தை கடல் மட்டம் உயர்வதிலிருந்து பாதுகாக்க டென்மார்க்கின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஒரு செயற்கை தீவுக்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

லினெட்டெஹோம் (Lynetteholm) என பெயரிடப்பட்ட இந்த மாபெரும் தீவு, ரிங் ரோடு, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ பாதை வழியாக பிரதான நிலத்துடன் இணைக்கப்படும்.

டென்மார்க்கின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள இந்த 1 சதுர மைல் (2.6 சதுர கி.மீ) திட்டம் இந்த ஆண்டின் இறுதிக்குள் தொடங்கவிருக்கிறது.

இத்தீவின் கட்டுமானத்தினால் ஏற்படும் தாக்கம் குறித்து, சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply