அமெரிக்கதவின் டெக்சாஸில் நிலவும் கடும் பனி பொழிவுக் காரணமாக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதனை பெரும் பேரழிவாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத பனியின் காரணமாக மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 20 க்கும் அதிகமானவர்கள் பனிக்கு பலியாகி உள்ள நிலையில் உண்மையான பலி எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை பெரும் பேரழிவு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
மேலும், டெக்சாஸ் மாகாண ஆளுநர் அபோட்டுடன் இணைந்து மீட்புப் பணிகளை அதிகாரிகள் நெருக்கமாக கண்காணித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெக்சாஸ் ஆளுநர் அபோட் கூறும்போது, “ டெக்சாஸில் நிலவும் பனிப் பொழிவை பெரும் பேரழிவாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது முக்கிய நடவடிக்கை” என்று தெரிவித்துள்ளார்.
டெக்சாஸ் மட்டுமில்லாமல் ஹவுஸ்டனிலும் கடுமையான பனி பொழிவுக் நீடிப்பதால் அங்கு மின் பாதிப்பு நிலவுகிறது.