ஜேர்மனியில் பிரபல மிருகக்காட்சி சாலையில் தீ விலங்குகள் பலி

314 Views

ஜேர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் மிருகக் காடசி சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல விலங்குகள் பலியாகியுள்ளன.

மேற்கு ஜேர்மனியில் அமைந்துள்ளது கிரெஃபெல்ட் மிருகக்காட்சி சாலை. இங்கு புத்தாண்டு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்க முன்னர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30இற்கும் அதிகமான விலங்குகள் பலியாகின.

தீ விபத்துச் சம்பவம் குறித்து மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தரப்பில், “எங்களது மோசமான பயம் நனவாகி விட்டது. பல விலங்குகள் இறந்து விட்டன. நாங்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. எங்களுக்கு உதவ விரும்பியவர்களுக்கு மிக்க நன்றி“ என்று தெரிவிக்கப்பட்டது.

விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை இதுவரை மிருகக் காட்சி சாலை நிர்வாகம் ஊடகங்களிடம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி வெடித்த பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ விபத்து ஏற்பட்ட மிருகக் காட்சி சாலையில் ஓராங்குட்டான்கள், சிம்பன்சிகள் மற்றும் கொரில்லாக்கள் என பல்வேறு வகையான குரங்கினங்கள் உள்ளன.

Leave a Reply