ஜெருசலேம் மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய படையினர் தாக்குதல் – 100க்கும் மேற்பட்ட பாஸ்தீனர்கள் காயம்

காசா பகுதியில் உள்ள போராளிக் குழுக்கள் மீது இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் இருந்து ஜெருசலேம் நகரத்தை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்பு இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

காசா பகுதியில் உள்ள போராளிக் குழுக்கள் மீது இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் இருந்து ஜெருசலேம் நகரத்தை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்பு இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலத்தீன சுகாதார அமைச்சகம் குழந்தைகள் உள்பட 20 பேர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

காசாவில் இருந்து ஜெருசலேம் நகரை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்பு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 1967ஆம் ஆண்டு ஜெருசலேம் பழைய நகரத்தில் அமைந்துள்ள கிழக்கு ஜெருசலேமை, இஸ்ரேல் ஆக்கிரமித்ததை கொண்டாடும் நிகழ்வாக, ஆண்டுதோறும் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

இந் நிலையில்லை, நேற்று (மே-10), கிழக்கு ஜெருசலேமில் நடந்த கொடி அணிவகுப்பின் போது, பாலஸ்தீனர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியின் வழியாக, தீவிர வலதுசாரி யூதர்கள் செல்ல திட்டமிட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது.

இந்தக் கொடி அணிவகுப்பு இரத்து செய்யப்பட வேண்டும் அல்லது வேறு பாதை வழியாகச் செல்ல வேண்டும் என்று பாலஸ்தீன மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல் காரணமாக, நுாற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய படையினர், ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் அதிக ஒலியெழுப்புவும் குண்டுகளாலும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலின் போது, 6 பத்திரிக்கையாளர்கள் மூச்சுத்திணறல் பிரச்சைனைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பாத்திமா அல் பாக்ரி என்ற பத்திரிகையாளரை இஸ்ரேலிய படையினர் கடுமையாக தாக்கியும் உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள செம்பிறை சங்கம்,“ பத்திரிகையாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் தாக்கப்பட்டுள்ளார். 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.