Tamil News
Home செய்திகள் ஜெனீவா கூட்டத்தொடர் – தமிழ் மக்களின் இராஜதந்திர அணுகுமுறை தொடர்பில் தெளிவற்ற தன்மை

ஜெனீவா கூட்டத்தொடர் – தமிழ் மக்களின் இராஜதந்திர அணுகுமுறை தொடர்பில் தெளிவற்ற தன்மை

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 24 ஆம் நாளில் இருந்து மார்ச் மாதம் 20 ஆம் நாள் வரையிலும் ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் சிறீலங்கா அரசு மீது முன்னர் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஆராயப்படுமா? என்ற கேள்விக்கான விடை தெளிவற்றதாகவே உள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு 2015 ஆம் ஆண்டு சிறீலங்கா மீது கொண்டுவந்த தீர்மானம் தொடர்பில் முன்னைய அரசு நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தற்போதைய அரசு அதனை கைவிடத் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில் இந்த தீர்மானம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்போகின்றது என்ற கேள்விகள் தமிழ் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.

இந்த தடவை தலைவருக்கான வாய்ப்பு மேற்கு ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அது ஒஸ்ரியாவின் ஐ.நாவுக்கான ஜெனீவா பிரதிநிதி திருமதி எலிசபத் றிசி பிஸ்பேர்க்கிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

47 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இந்த சபையில் 13 ஆசிய நாடுகளும்,13 ஆபிரிக்க நாடுகளும், 8 லந்தீன் அமெரிக்க நாடுகளும், 7 மேற்கு ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.

வழமைபோல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஜெனீவாவை நோக்கி நீதிக்கான போராட்டங்களை ஆரம்பித்துள்ளபோதிலும் அவர்கள் இராஜதந்திர ரீதியாக என்ன அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது தொடர்பில் தமிழ் மக்களிடம் தெளிவற்ற தன்மையே காணப்படுவதாக ஐரோப்பாவை தளமாகக் கொண்ட இராஜதந்திர அவதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version