ஜெனீவாவை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு – சுமந்திரன்

253 Views

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை விவகாரம் எடுக்கப்படவிருக்கையில் அது தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் ஒன்றுபட்ட தமிழர் தரப்பாக ஊடாடுவது குறித்து பிற தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துகின்றோம்.

இவ்வாறு ஊடகங்களுக்குத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

“ஜெனிவா விவகாரம் குறித்து சர்வதேசசமூகத்துடன் பேச்சுக்களை ஆரம்பித்துள் ளோம். சர்வதேச சமூகத்துடன் ஒன்றுபட்ட தமிழர் சக்தியாக ஊடாடவே நாம் விரும்புகின்றோம். இதற்காக எந்த அடிப்படையில் நாம் ஒன்றுபட்டுச் செயற்பட முடியும் என்பதை பிற தமிழ்க் கட்சிகளுடன் ஆராய்கின்றோம். இதற்காக அவற்றுடன் பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன” என்றார் அவர்.

Leave a Reply