ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து விலகிய சம்பிக்க – புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க திட்டம்?

235 Views

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று விலகினார்.

அரசியலில் புதிய பாதை ஒன்றில் பயணிப்பதற்காகவே ஜாதிக ஹெல உருமயவிலிருந்து சம்பிக்க விலகியிருப்பதாகத் தெரிகின்றது.

இலங்கை மன்றத்தில் நடைபெற்ற ஜாதிக ஹெல உறுமயவின் விசேட பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார். புதிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகக் கட்சியிலிருந்து நீங்குகின்றார் என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய செயற்குழு உறுப்பினர்களும் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். கருணாரத்ன பரணவிதான, நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, அநுருத்த பிரதீப், மற்றும் நிரோஷா அத்துகோரள ஆகியோர் கட்சியின் செயற்குழுவிலிருந்து விலகியுள்ளனர்.

Leave a Reply