ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை அச்சுறுத்தினார் – விஜயதாச

199 Views

ஜனாதிபதி தன்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுஅச்சுறுத்தியுள்ளார் என சிறிலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொழும்பு துறைமுக நகர் தொடர்பில் தான் தெரிவித்த கருத்துக்களிற்காக ஜனாதிபதி எனக்கு அச்சுறுத்தல்விடுத்தார் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தகாதவார்த்தைகளை பயன்படுத்தி நாடு ஒன்றின் தலைவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை என விஜயதாச ராஜபக்ச டெய்லி மிரருக்கு தெரிவி;த்துள்ளார்.

ஜனாதிபதியின் பாணியிலேயே நான் பதிலளித்தேன் தற்போது எனது மற்றும் எனது குடும்பத்தவர்களின் உயிர்களின் பாதுகாப்பு குறித்து நான் அச்சமடைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply