ஜனாதிபதி தேர்தல்- யாழ். நகர அபிவிருத்திகளில் ரணில் அதிக அக்கறை

989 Views

சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா நேற்று (14) யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் சிறிலங்கா பிரதமரை ஐக்கிய தேசியக் கட்சியினர் சந்திப்பர்.

அதன் பின்னர் இன்று (திங்கட்கிழமை) சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொள்வார்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் அழைப்பின்  பெயரில் ரணில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதுடன், ஐந்தரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் கலையரங்கத்திற்கான அடிக்கல்லையும் நாட்டவுள்ளார்.

மேலும் ரணில் காரைநகருக்கான விஜயம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக யாழ். நகர அபிவிருத்திகளில் ரணில் அதிக அக்கறை செலுத்துவதாகத் தெரிகின்றது. ஜனாதிபதி தேர்தல்  நெருங்கி வரும் சமயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் இச் செயலானது, வாக்கு  கேட்கும் ஒரு நடவடிக்கையாக அமைவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply