ஜனசெத பெரமுனவின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் யாழ்ப்பாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்த அவர், இதன்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணத்தை விளக்கும் சிங்கள மற்றும் தமிழ் மொழியிலான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார்.