சோடித்த சம்பவம் மூலமே இராணுவம் கைது செய்தது – முன்னாள் போராளியின் உறவுகள் சாடல்

162 Views

சோடித்த சம்பவம் மூலமாகவே முன்னாள் போராளியை இராணுவம் கைது செய்தது என்று கைதானவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் வெள்ளிக்கிழமை நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் யாழ். படை தலைமையகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பில் அவரின் உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“படைத்தரப்பின் தகவல்கள் பொய்யானவை. சோடிக்கப்பட்ட சம்பவத்தின் மூலமே அவரைக் கைது செய்தனர். கடந்த தைப்பொங்கலின்போது சில இளைஞர்கள் இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அந்த இளைஞர்கள் தலைமறைவாகினர். அவ்வாறு தலைமறைவான இந்த இளைஞர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகி பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையிலேயே இராணுவம் சோடித்த சம்பவம் மூலம் அவரைக் கைது செய்து” என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

Leave a Reply