585 Views
சொந்தமாக நாடுகள் இல்லாத தேசங்களுக்கிடையிலான சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகள் தற்பொழுது நெதர்லாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
CONIFA (Confederation of Independent Football Associations) என்று அழைக்கப்படுகின்ற இந்த சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் தமிழீழ அணியும் பங்குபற்றுவது வழக்கம்.
புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் இளைஞர்களைக் கொண்ட அணி இன்றைய தினம் நெதர்லாந்தில் மேற்கு பப்புவா அணியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் மேற்கு பப்புவா அணியை 10 இற்கு 2 என்ற கோல் கணக்கில் தமிழீழ அணி இலகுவாக வெற்றியீட்டியது.