Tamil News
Home உலகச் செய்திகள் செவ்வாய் கிரகத்தில் பூமியின் ஆதிகால உயிரிகள்

செவ்வாய் கிரகத்தில் பூமியின் ஆதிகால உயிரிகள்

சில தாவரங்கள் எல்லா சூழலிரும் வாழக்கூடியவை. பிராண வாயு இல்லாத நிலையிலோ, அதிக வெப்பமான பிரதேசத்திலோ உயிர் வாழக் கூடியவை. இவை  பருவ நிலை மாற்றத்தையும், நமது உணவு உற்பத்தியையும் எந்த அளவு பாதிக்கும் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆர்வமாக ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் இந்த விடயத்தில தாவரங்கள் ஒன்றைவிட ஒன்று வித்தியாசமாக அமைகின்றது.

இவை பற்றி ஆராய்வு செய்வதற்கு தாவரவியலாளரும், BBC நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேமஸ் வோங் என்பவர் முற்பட்டார். அப்போது நமது பூமியின் கடினமான தாவரங்களின் வினோதமான மற்றும் ஆச்சர்யத்துக்குரிய உண்மைகளை அவர் கண்டறிந்தார்.

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு ஏற்ற கடினமான இரண்டு தாவர வகைகளை ஜெர்மனி விஞ்ஞானிகள் அடையாளம் கண்டனர்.

சுவிட்சர்லாந்து மற்றும் அந்தாட்டிகாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கற்பாசிகள் (Lichens) மற்றும் நீலப்பசும் பேக்டீரியா (Cyanobacteria) ஆகிய இரண்டுமே இவைகளாகும்.

இந்த ஆதிகால தாவரங்கள் செவ்வாய்க் கிரகத்தில் உயிர்வாழ முடியுமா என பரிசோதனை செய்வதற்காக – கடுமையான சூரிய வெப்பம், வெப்ப நிலை மாற்றங்கள், அதிக அளவிலான உலர்ந்த நிலை மற்றும் குறைவான காற்றழுத்தம் – போன்ற செவ்வாய் கிரகத்தின் சூழ்நிலைகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர்.

இதன் போது இந்தத் தாவர இனங்கள் உயிர் பிழைத்திருந்தது மட்டுமின்றி, ஒளிச் சேர்க்கை செய்தல் மற்றும் வழக்கமான தாவர செயல்பாடுகள் தொடர்ந்து நடக்கின்றன என்பதைக் கண்டறிந்தார்கள்.

Exit mobile version