செவ்வாய் கிரகத்தில் களிமண் துகள்கள்

செவ்வாய் கிரகத்தில் களிமண் துகள்கள் இருப்பதாக கியூரியாசிற்றி ரோவர் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய்க் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய கடந்த 2012ஆம் ஆண்டு தரையிறங்கியது. பூமிக்கு அடுத்து, உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறுகள் உள்ள கிரகமாக செவ்வாய்க்கிரகம் கருதப்படும் நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் கிரனைட் கற்கள் இருப்பதாக ரோவர் கண்டுபிடித்துள்ளது என கடந்த 2013ஆம் ஆண்டே நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். ஆயிரக்கணக்கான படங்களை பூமிக்கு அனுப்பியுள்ள ரோவர் செவ்வாயில் சுமார் 13 மைல்கள் சுற்றித் திரிந்தும், 1,207 அடி உயரம் ஏறியும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

அங்குள்ள கேல் கேட்டர் என்ற வறண்ட ஏரி மையத்தில் 16,404அடி உயரமுள்ள மலையில் ஆய்வுகளை நடத்தி வருகின்றது. அந்த பகுதியில் களிமண் துகள்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ரோவர், மேற்பரப்பின் 22 மாதிரிகளை துளையிட்டு எடுத்துள்ளது.

இது குறித்து கூறிய கலிபோர்ணியா இன்ஸ்டிடியுட் ஒப் டெக்னோலஜியில் களிமண் ஆய்வு இணைத் தலைவரான வலேரிஃபாக்ஸ், ரோவரின் கமரா செவ்வாயின் பல பகுதிகளை  படம் பிடித்து அனுப்பியுள்ளது. இது அலை, வண்டல் அடுக்குகளைக் கொண்டது. இது காற்று, நீர் அல்லது இரண்டாலும் ஏற்பட்டிருக்கலாம். இந்தப் பாறைகளில் பதிவு செய்யப்பட்ட பண்டைய ஏரி சூழலில் ஒரு பரிணாம வளர்ச்சியை தாங்கள் கண்டதாகவும்  தெரிவித்தார்.