சென்னையிலேயே சைபர் தாக்குதல் அதிகம்

சென்னை நகரமே, இந்தியாவில் அதிகளவில் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ‘கே 7’ சைபர் பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் 2020 ஜனவரி முதல் மார்ச் சரை சைபர் அச்சுறுத்தல் ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தது.

இந்த ஆய்வில் இந்தியாவிலேயே அதிகளவு சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட நகரமாக 42 சதவீத புள்ளிவிபரங்களுடன் சென்னை முதலிடம் பிடித்தது. அதற்கடுத்ததாக 38 சதவீதத்துடன் பெங்களுரு, பாட்னா ஆகிய நகரங்கள் உள்ளன. மூன்றாவது இடத்தில் கொல்கொத்தா, ஐதரபாத் ஆகிய நகரங்கள் உள்ளன.

சைபர் தாக்குதலினால் வின்டோஸ் – 7 வின்டோஸ் எக்ஸ் பி பயன்படுத்துவோரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தனிநபர்களைப் பொறுத்தவரை மால்வேர் மென்பொருள் பயன்படுத்துவோர் மற்றும் கொரோனா தொடர்பான செயலிகளைப் பயன்படுத்துவோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.