Tamil News
Home உலகச் செய்திகள் சூழல் அழிவிற்கு முன்னணி தொழில்துறை நாடுகளே காரணம் – பிரான்சில் ஆர்ப்பாட்டம்

சூழல் அழிவிற்கு முன்னணி தொழில்துறை நாடுகளே காரணம் – பிரான்சில் ஆர்ப்பாட்டம்

உலகின் முன்னணி தொழில்துறை நாடுகள் பின்பற்றும் பொருளாதார மற்றும் காலநிலைக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்பெயினுடனான பிரெஞ்சு எல்லையில் உள்ள ஹென்டே நகரில் ஆர்ப்பாட்ட மொன்றை முன்னெடுத்தனர்.

இன்று உலகில் இடம்பெறும் சூழல் அழிவு நடவடிக்கைகளுக்கு ஜி 7 போன்ற உலகின் முன்னணி தொழில்துறை நாடுகளே கரணம்
என போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.உலகமயமாக்கலின் விளைவாக இன்று உலகம் பாரிய அழிவுகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

உலகத்தலைவர்கள் இதுதொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் கோரினர்.

 

Exit mobile version