சுவிஸ் தூரகப் பெண் விவகாரம்; ஆராய கொழும்பு வந்துள்ள சுவிஸ் உளவுத்துறை

வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார் எனக் குறிப்பிடப்படும் இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் தூதரகப் பெண் பணியாளர் கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸ் விவகாரத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறிய, சுவிஸ் உளவுத்துறை அதிகாரிகள் குழு இலங்கை வந்துள்ளது.

கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களின் விசாரணைக்கு, இலங்கை உளவு அமைப்புக்களும் உதவி வழங்கியுள்ளன. தம்மிடமிருந்த ஆதாரங்களையும் சுவிஸ் குழுவுடன் பகிர்ந்துள்ளனர்.

கார்னியர் கடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படும் இடங்களுக்கு நேரில் சென்று சுவிஸ் குழு ஆய்வு செய்தது. இதேவேளை, சுவிஸ் உளவுக் குழுவினரின் அறிக்கையிலும், கார்னியர் கடத்தப்பட்டமைக்கு ஆதாரமில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கடத்தல் விவகார செய்தியை முதலில் வெளியிட்ட நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்கு, செய்தியை வழங்கிய ஊடகவியலாளரும் தற்போது நாட்டை விட்டு வெளியேறி சுவிஸில் அடைக்கலம் புகுந்துள்ளார் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply