Tamil News
Home செய்திகள் சுவிசில்  நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள்

சுவிசில்  நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள்

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2020 ஞாயிறு பேர்ண் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடர்இ ஈகைச்சுடரேற்றலுடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டதோடு அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

மக்களால் சுடர்இ மலர் வணக்கம் செலுத்தப்பட்ட வேளையில் கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும் வழங்கப்பட்டன.

முதற்கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் 33வது ஆண்டு நினைவுகளைத தாங்கியதுமான இவ்வெழுச்சிநிகழ்வில் கவிதை, பேச்சுக்கள், பாடல்கள் இடம்பெற்றது. நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டுஇ தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

கொரோனாத் தொற்றானது உலகப்பேரிடராக மாறிநிற்கும் இன்றைய அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் சுவிஸ் கூட்டாட்சி அரசினால் வழங்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றிய எமது உறவுகள் கரும்புலிகள் எழுச்சி நினைவில் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி அவர்களுக்குரிய வீரவணக்கத்தினைச் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version