M H 17 என்ற பயணிகள் விமானம் ஆம்ஸ்டெர்டாமிலிருந்து கோலாலம்éர் செல்லும் போது, சுட்டு வீழ்த்தப்பட்டது. 2014 இல் உக்ரெனில் விழுந்து நொருங்கிய மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக 4 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஸ்யர்களும் லியோனிட் கார்சென்கோ என்னும் உக்ரேன் நாட்டவரும் விமானத்தை எறிகணை கொண்டு சுட்டு வீழ்த்தி பயணிகள், விமானப் பணியாளர்கள் உள்ளடங்கலாக 298பேரை கொலை செய்ததாக நெதர்லாந்து விசாரணையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் 2020 மார்ச்சில் தொடங்கவுள்ளது. இந்த நான்கு பேருக்கு எதிராக சர்வதேச ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த கூட்டு விசாரணை குழு முதலில் ஒரு பெரிய பட்டியல் இருப்பதாகவும் ஆதாரம் கிடைத்தால் வெளியிடுவதாகவும் அறிவித்திருந்தது.
இகோர் கிர்கின் என்பவர் ரஷ்ய உளவுத்துறையின் முன்னாள் கேணல் ஆவார். அவருக்கு கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த டோனெட்ஸ்க் என்ற நகரத்தின் பாதுகாப்பு அமைச்சர் என்னும் பதவி வழங்கப்பட்டிருந்தது.
ரஸ்ய கூட்டமைப்பின் உயரிய இராணுவ அதிகாரி என மதிக்கப்படுபவர் கிர்கின் ஆயுதக் குழுக்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தவில்லை என்பதை மட்டும் தன்னால் கூறமுடியும் என்று தெரிவித்துள்ளார்.