சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமணம்; வவுனியாவில் மண்டபம் ‘சீல்’ வைக்கப்பட்டது

192 Views

வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றமையால் திருமண மண்டபம் சுகாதாரப் பிரிவினரால் நேற்று மாலை ‘சீல்’ வைத்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.

வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் மன்னாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை மீறி அதிகளவிலான உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டமையுடன், சுகாதார அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், அங்கு சென்ற சுகாதாரப் பிரிவினர் அங்கு கூடியிருந்தவர்களைக் கடும் எச்சரிக்கை வழங்கி அங்கிருந்து வெளியேற்றிதுடன், திருமண வீட்டாருக்கும் கடும் எச்சரிக்கை வழங்கினர்.

சுகாதார அறிவுறத்தல்களை மீறி மண்டபத்தை வழங்கி மக்களை ஒன்றுகூட்டியமை தொடர்பில் திருமண மண்டபம் சுகாதாரப் பிரிவினரால் “சீல்’ வைக்கப்பட்டு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.

Leave a Reply