சீன எதிர்ப்பாளர்கள் போலி செய்திகளை பரப்புகின்றனர் – சீனத் தூதரகம் சீற்றம்

402 Views

சீனா எதிர்ப்பாளர்கள் சமூக ஊடகங்களிலும் மேற்குல ஊடகங்களிலும் போலியான செய்திகளை பரப்புகின்றார்கள் என இலங்கைக்கான சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

சீன மொழியை உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தியமைக்காக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சீன ஜனாதிபதி நன்றி தெரிவித்தார் என டுவிட்டரில் வெளியான பதிவினை சுட்டிக்காட்டி சீன தூதரகம், சீனா எதிர்ப்பாளர்கள் சமூக ஊடகங்களிலும் மேற்குல ஊடகங்களிலும் போலியான செய்திகளை பரப்புகின்றார்கள் என தெரிவித்துள்ளது.

சீனாவின் தடுப்பூசி கொரோனா வைரசினை எதிர்த்து போராடுவதற்கு உதவும் ஆனால் சீனாகுறித்த அச்சம் இன்னொரு வைரஸ் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply