முதல் முறையாக சீனாவுடன் சேர்ந்து கூட்டாக விமான ரோந்து நடவடிக்கையை, சண்டை விமானங்களின் துணையோடு ஜப்பான் கடல், கிழக்கு சீனக் கடல் பகுதியில் மேற்கொண்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதன் போது நான்கு குண்டு வீசும் விமானங்களும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதை எதிர்த்து பதிலுக்கு தென்கொரியா தமது ஜெட் விமானங்களை அனுப்பியதாக அறிவித்துள்ளது
இச்சம்பவம் தொடர்பாக ரஷ்யா, தென்கொரியா ஆகிய இரு நாடுகளையும் ஜப்பான் கண்டித்துள்ளது.
இந்த சம்பவம் டோக்டோ/டகேஷிமா தீவுகளுக்கு மேல் நடந்துள்ளது. இவை தென்கொரிய ஆக்கிரமிப்பில் உள்ள தீவுகளாகும் .இருந்தும் இவற்றிற்கு ஜப்பான் உரிமை கோரி வருகின்றது.
கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்தில் செவ்வாய்கிழமை காலை ரஷ்ய மற்றும் சீன விமானங்கள் உள்நுழைந்துள்ளன.
இந்தப் பகுதியில் சமீப ஆண்டுகளாக ரஷ்ய, சீன குண்டு வீசும் விமானங்களும், உளவு விமானங்களும் அவ்வப்போது பறந்துள்ளன.