சீனாவில் இருந்து தப்பிச் சென்ற அமைச்சர்- வுஹான் ஆய்வு கூடம் குறித்த அமெரிக்காவுக்கு தகவல் வழங்கியதாக செய்தி

382 Views

சீனாவிலிருந்து தப்பிச்சென்ற அந் நாட்டின் அமைச்சர் Dong Jingwei, வுஹான் ஆய்வுகூடம் பற்றி முக்கிய தகவல்களை அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளார் என அமெரிக்காவின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு விபரங்கள் குறித்து தகவல்களை வெளியிடும் SpyTalk  தெரிவித்துள்ளது.

Dong Jingwei சீனாவின் அமைச்சராக நீண்ட காலம் பணியாற்றியவர்- 2018 முதல் அவரே சீனாவின் புலனாய்வு நடவடிக்கைகளிற்கு பொறுப்பாகயிருந்தார் என்றும் கூறப்படும் நிலையில், அவரை சீனாவிடம் ஒப்படைக்கவேண்டும் என சீனா அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்டன் அதனை நிராகரித்துள்ளார்.

Leave a Reply