Tamil News
Home உலகச் செய்திகள் சீனாவின் பொருளாதார இலக்குகளை தாக்கும் இந்தியா

சீனாவின் பொருளாதார இலக்குகளை தாக்கும் இந்தியா

பாகிஸ்தானில் உள்ள சீனாவின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மீது இந்தியா தீவிரவாதிகளை பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மகமூட் இப்ரிகான் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் எம்மிடம் ஆதாரங்கள் உள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவின் புலனாய்வுதுறையினர் பாகிஸ்தான் மீதான தாக்குதலை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் இருந்தும் தாக்குதல் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பான ஆதாரங்களை நாம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியுள்ளது. அனைத்துலக சமூகத்தின் ஆதரவு இன்றி இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சனைகளை தீர்க்க முடியாது.

அண்மையில் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீர் பகுதியில் இந்தியா மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் 5 பொதுமக்களும் ஒரு படை அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளனர் பாகிஸ்தானில் உள்ள சீனாவின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் துறைமுக அபிவிருத்தி திட்டங்கள் மீதே இந்தியா தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்திய புலனாய்வு அதிகாரிக்கும் பாகிஸ்தான் தீவிரவாத குழுவின் தலைவருக்குமிடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஒலிபரப்பப்பட்டது.

Exit mobile version