சீனாவின் தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து

சீனாவின் இரண்டு  கொரோனா  தடுப்பூசிகளும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவது குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம், சினோவாக் கொரோனாதடுப்பு மருந்துகளை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து இந்த வாரம் அறிவிக்கப்படும்.

சில நாடுகள் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு எங்கள் முடிவுக்காகக் காத்திருக்கின்றன என்பதை நன்கு அறிவோம். விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.