Tamil News
Home செய்திகள் சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்பூட்டும் நடவடிக்கை

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்பூட்டும் நடவடிக்கை

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் பாதுகாப்பு ,உரிமைகள் தொடர்பான விழிப்பூட்டும் நடவடிக்கைகளாக வாகனங்களில் ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.

தம்பலகாமம்  பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இன்று (02)இடம் பெற்ற குறித்த நிகழ்வில் சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் வீதியால் போக்குவரத்து செய்யும் வாகனங்களில் ஒட்டப்பட்டும் துண்டு பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.  தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள கண்டி திருகோணமலை பிரதான வீதியில் இது  இடம் பெற்றது.

“எல்லாவற்றையும் விடவும் பிள்ளைகள் பெறுமதியானவர்கள்”என்ற தொனிப்பொருளின் கீழ் இம் முறை சிறுவர் தின கொண்டாட்டம் இடம் பெற்ற நிலையில் இது போன்ற நிகழ்வுகள் மக்களுக்கு விழிப்பூட்டவும் சிறுவர்களின் உரிமைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந் நிகழ்வு எடுத்துக்காட்டப்படுகிறது.

குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,நிருவாக உத்தியோகத்தர் உடகெதர உட்பட ஏனைய சகல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version