சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கிய பெண் கிராம சேவகர் உள்ளிட்ட மூவருக்கு ஏற்பட்ட நிலை!

கொட்டவெஹர பிரதேசத்தி சிறுமி ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை மற்றும் சித்தி அவருடைய சகோதரி ஆகியோருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த 3 பேரையும் எதிர்வரம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நிக்கவரெட்டிய நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், தாக்குதல் நடத்தியவர்களில் ஒரு பெண் கிராம சேவகர் எனவும், அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

கடுமையான தாக்குதலுக்கு உள்ளான சிறுமி நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.