சிறீலங்கா நாடாளுமன்றம் மார்ச் மாதம் கலைப்பு

சிறீலங்காவின் நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் நாள் கலைக்கப்படவுள்ளதாக சிறீலங்கா அரச தலைவர் கோத்தபயா ராஜபக்சா இன்று (19) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைத்த பின்னர் பொதுத்தேர்தலை விரைவாக நடத்துவோம். கடந்த அரசு கொண்டுவந்த 19 ஆவது திருத்தச்சட்டம் மிகப்பெரும் தவறு, நாட்டின் எதிர்காலத்திற்கு அது மிகப்பபெரும் தடையாக இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.