சிறீலங்கா தற்போது சீலங்காவாக மாறப்போகிறது -இரா.சாணக்கியன் 

348 Views

மாகாண சபைகளுக்கூடாக அதிகாரங்களைப் பிரித்துக் கேட்கும் தமிழர்களை புலிகள் என்கிறார். இஸ்லாமியர்களை அடிப்படைவாதிகள் என்கிறார்கள். ஆனால், சீனாவுக்கு மாத்திரம் நாட்டுக்குள் இடத்தை வழங்கியுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  குற்றம்சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய  இரா.சாணக்கியன்,

“பொருளாதாரத்தில் நாட்டினுடைய அனைத்துப் பக்கங்களையும் சீனா கைப்பற்றும்.  சிறீலங்கா தற்போது சீலங்காவாக மாறப்போகிறது. நாட்டின் அனைத்துப் பாகங்களையும் சீனா கைப்பற்றும்.

உலகின் பல்வேறு நாடுகளுக்கு நுழைந்த சீனா, அந்தந்த நாடுகளிலுள்ள தொழிற்றுறைகளைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், இலங்கைக்கு உள்ள அமைவிடத்தையே கைப்பற்றப் பார்க்கிறது” என்றார்.

Leave a Reply