Tamil News
Home செய்திகள் சிறீலங்கா – சுவிஸ் மோதல் வலுக்கின்றது – உயர்மட்ட அதிகாரியை அனுப்புகிறது சுவிஸ்

சிறீலங்கா – சுவிஸ் மோதல் வலுக்கின்றது – உயர்மட்ட அதிகாரியை அனுப்புகிறது சுவிஸ்

சுவிற்சலாந்து தூதரகத்தில் பணியாற்றிய சிறீலங்கா பணியாளர் வெள்ளைக் காரில் கடத்தப்பட்ட போதும்இ கடத்தியவர்களை விட்டுவிட்டு கட்டத்தப்பட்ட பெண்ணை சிறீலங்கா அரசு விசாரணை என்ற பெயரில் கைது செய்து அடைத்து வைத்துள்ளது.

இந்த நிகழ்வு சுவிற்சலாந்து அரசுக்கு கடுமையான சினத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் சிறீலங்கா அரசிடம் தனது கவலையை தெரிவித்துள்ள சுவிஸ் அரசு இந்த விவகாரத்தை கையாளுவதற்கு தனது மூத்த மற்றும் அனுபவம்வாய்ந்த அதிகாரி ஒருவரை சிறீலங்காவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

முன்னாள் தூதுவர் ஜோர்க் பிரேடன் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டு அங்கு உள்ள சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு மற்றும் பணியாளர் தொடர்பான விவகாரங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதுடன் பேச்சுக்களையும் மேற்கொள்வார் என சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் சுவிஸ் அரசு ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

Exit mobile version