சிறீலங்கா கடற்படையினரின் காணி அபகரிப்பு நடவடிக்கை கூட்டாக முறியடிப்பு

241 Views

மண்டைதீவில் கடற்படையினரின் பாவனைக்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த முறியடிப்பு நடவடிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகள் கூட்டாக இந்த நடவடிக்கையில் பங்கெடுத்தன.
மண்டைதீவு 7ஆம் வட்டாரத்தில் உள்ள 4 குடும்பங்களிற்கு சொந்தமான 62 பரப்பு காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் அறிவித்தல், காணி உரிமையாளர்களிற்கு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், பிரதேசத்திலுள்ள தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினர் மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளின் இளைஞர் அணியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள் விந்தன் கனகரட்ணம், ஈ.சரவணபவன், சி.சிறிதரன், பா.கஜதீபன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் க.சுகாஷ், ந.காண்டீபன், ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேசசபை தவிசாளர் உள்ளிட்டவர்கள் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

யாழ் நில அளவையாளர் திணைக்களத்தினர் காணியை அளவீடு செய்ய முயன்றபோது, அனைத்து தரப்பினரும் கூட்டாக எதிர்த்தனர்

Leave a Reply