Tamil News
Home செய்திகள் சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் நெருங்கும்போது சம்பந்தருக்கு தோன்றியுள்ள தமிழ்த் தேசிய சிந்தனை

சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் நெருங்கும்போது சம்பந்தருக்கு தோன்றியுள்ள தமிழ்த் தேசிய சிந்தனை

சர்வதேசநாடுகளுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறை வேற்றப்படவில்லை. இந்த நிலையில் சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர, பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்குஅழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

  நாடாளுமன்றத்தில் நேற்று புதியஅரசியலமைப்பு தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“யுத்தம்முடிந்து தற்போது 10 வருடங்கள்கடந்த போதும் தமிழருக்கு ஒரு அரசியல்தீர்வு கிடைக்கவில்லை. தற்போது தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாகநடத்தப்படுகின்றனர். சர்வதேச சமூகம் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது. சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை வழங்கவேண்டும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் உதவியது. இதனால் தமிழ் மக்களே அதிகம்பாதிக்கப்பட்டது.

தமிழருக்கு பாரதூரமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன்னர் தமிழர்கள் பிரிவினையை விரும்பியிருக்கவில்லை. நாட்டை பலவழிகளில் பிரிப்பது நாட்டுக்கோ தமிழருக்கோ நன்மையில்லை. அதுதான்சமஷ்டிக் கட்சியின் கொள்கை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வே தமிழர்களின் விருப்பமாகும்.

நாடுசக்திமிக்க ஒன்றாக மாறவேண்டுமானால் தமிழர்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். சமூக, கலாசாரஉரிமைகளை கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு உள்ள சுயநிர்ணய உரிமையைஉங்களால் மறுக்க முடியுமா?

1956 ஆம் ஆண்டில்இருந்து வட கிழக்குமக்கள்மாற்றத்திற்கு வாக்களித்தனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இந்தஅரசு பொறுப்புடன்செயற்பட வேண்டும். சிங்கள பௌத்த மயமாக்கல் வடக்குகிழக்கில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதால் தான் தமிழர் பிரச்சினை தீர்வுதாமதமாகிறதா என்று தமிழ் மக்களும்நாங்களும் அச்சம் கொண்டுள்ளோம். இதுசூட்சுமமாக முன்னெடுக்கப்படு கிறது.

எல்.எல்.ஆர்.சிஅறிக்கையின் சிபாரிசுகளைநிறைவேற்றுங்கள். சர்வதேச சமூகத்திற்குவழங்கிய வாக்குறுதிகளைநிறைவேற்றாமல் விட்டு மக்களால்நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பைவைத்துக் கொண்டு நீங்கள் ஆட்சிசெய்தால் அது தவறு.

அப்படிச்செய்தால் நீங்கள்தோல்வியடைந்த அரசாக, செல்லுபடியற்றஅரசாக ஆகிவிடுவீர்கள். எனவே உச்சபட்சஅதிகாரப்பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். எமது மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்ற முடியாது.

தமிழ்மக்கள் சுய நிர்ணயஉரிமையைகோருவதற்கான அனைத்துதகுதியுடையவர்களாக இருக்கின்றனர்.இருந்தாலும் நாம் அவ்வாறான தீர்மானத்திற்கு செல்லவில்லை என்பதைஇங்கு தெரிவித்துக் கொள்கின்றேன். எனவே அமைத்து மக்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் செயற்படுவீர்கள்என எண்ணுகின்றேன்” எனகூறியுள்ளார்

Exit mobile version