சிறீலங்கா அரசுக்கு எதிராக சிங்கள தாதியர்கள் போராட்டம்

கொரோனா வைரஸ் நோயாளர்களை பராமரிக்கும் போது எங்களை போர் வீரர்கள் என போற்றிய சிறீலங்கா அரசு தற்போது தம்மை நடுத்தெருவில் கைவிட்டுள்ளதாக தென்னிலங்கை மருத்துவமனைகளில் கடமையாற்றும் சிங்கள தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.

தாதியர்களுக்கு வழங்கவேண்டிய மேலதிக கடமை நேரங்களுக்கான கொடுப்பனவை சிறீலங்கா அரசு வழங்க மறுத்து வருவதை தொடர்ந்து தென்னிலங்கையில் தாதியர்கள் நேற்று (15) சிறீலங்கா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பெரும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ள சிறீலங்கா அரசு பல துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு ஊதியங்களை வழங்குவதற்கு திண்டாடி வருவதாக கொழும்பு தாகவல்கள் தெரிவிக்கின்றன.