சிறீலங்கா அரசின் கொலைப் படையின் உறுப்பினராக இருந்தவர் ஜெனிவாவிற்கான புதிய இலங்கை தூதுவர்

எண்பதுகளில் மனித உரிமைகள் சடடவாளர்கள், பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலைப் பிள்ளைகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களின் கொலைகளுக்குப் பொறுப்பான ஒரு கொலைப்படையில் உறுப்பினராக இருந்தமையால் இலங்கைக்கான தெரிவுசெய்யப்பட்ட தூதுவரான சி.ஏ சந்திரபிறேமாவுக்கான அங்கீகாரத்தை சுவிட்சர்லாந்து மறுக்க வேண்டும் என அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயல்த்திட்டம் என்ற அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அந்தக் காலப் பகுதியில் தடிப் பிரியந்த என அறியப்பட்ட சி.ஏ சந்திரபிறேம 40000 பேர் கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்களின் ஒரு எழுச்சியின் போது சந்தேகநபர்களை இலக்கு வைப்பதற்கு இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய நிழல் ஆயுதக்குழுக்களில் ஒன்றான மக்கள் புரட்சிகர சிவப்பு இராணுவம் அல்லது பி.ஆர்.ஆர்.ஏ இன் முக்கிய உறுப்பினராக இருந்தார்.

பி.ஆர்.ஆர்.ஏ கொலைகள் மற்றும் வலிந்து காணாமற்போதல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக அறிக்கைகளை அந்தக் காலப்பகுதியில் வெளியிட்ட சர்வதேச மன்னிப்புச் சபையின் பணியாளர்கள் உட்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு பி.ஆர்.ஆர்.ஏ வழமையாக கொலை மிரட்டல்களை விடுத்தது. 1989 இல் சரித்த லங்காபுர மற்றும் காஞ்சனா அபயபால ஆகிய இரண்டு மனித உரிமைகள் வழக்கறிஞர்களின் படுகொலைகள் தொடர்பில் சந்திரபிறேம 2000 ஆம் ஆண்டு இலங்கையில் கைது செய்யப்பட்டார்.

தடுப்புக்காவலில் உள்ள ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி பகிரங்கமாக இணையத்தில் கிடைக்ககூடிய இருக்கும் ஒரு வாக்குமூலத்தில் சந்திரபிறேமாவை குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு கொலையாளி எனக் குறிப்பிட்டிருந்தார். ஆயினும் மேற்கொண்டு தொடர்வதற்கு சட்டரீதியான எந்த ஆதாரங்களும் இல்லை என சட்டமா அதிபர் தீர்மானித்ததையடுத்து சந்திரபிறேம விடுதலை செய்யப்பட்டார். அதிலிருந்து இலங்கையிலுள்ள அனைத்துப் பெரிய அரசியல்கட்சிகளுடனான அவரது தொடர்புகள் மூலம் அவர் பாதுகாக்கப்பட்டுவருகிறார்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தை கொண்ட அமைப்பான மனித உரிமைகள் பேரவையில் துணிச்சலான மனித உரிமைகள் வழக்கறிஞர்களைக் கொலைசெய்வதில் பங்குள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்தற்காக சரியானமுறையில் ஒருபோதுமே விசாரிக்கப்படாத ஒரு மனிதர் அவர் என்பது முற்றிலும் முரணானதாக உள்ளது” என அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயல்த்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

“மனித உரிமைகள் பேரவைக்குவரும் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி மிரட்டும் ஒரு கடந்தகால வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது. ஜெனிவானில் ஒரு இராஜதந்திர நவடிக்கையை தலைமைதாங்குவதற்கு இதுபோன்ற மனிதரை வைத்திருப்பது முற்றிலும் பாதுகாப்பானதல்ல.” அண்மைய ஆண்டுகளில் சந்திரப்பிறேம ஒரு பத்திரிகை எழுத்தாளர் ஆனார். 2012 இல் அவர் ஜனாதிபதி கோத்தபாஜ ராஜபக்சவின் வாழ்க்கைவரலாற்றுப்புத்தகத்தை எழுதினார். இது ஐக்கிய நாடுகளின் தொடர் விசாரணைகளில் துல்லியமான முறையில் ஆவணப்படுத்தப்பட்ட 2009 இல் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினர் புரிந்த போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுக்கின்றது.

“தண்டிக்கப்படாத அரச குற்றம் என்பது கொண்டாடப்பட்ட இலங்கையின் ஜனநாயகத்தின் வெறுப்பூட்டும் அடித்தளமாக உள்ளது” என இலங்கையின் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பினைச் சேர்ந்த பாசனா அபயவர்த்தன தெரிவித்தார். “ எவரும் எதிர்ப்புக் கூட தெரிவிக்காமல்இ ஐக்கிய நாடுகளிற்கான நாட்டின் பிரதிநிதியாக கொலைப்படையின் முன்னாள் உறுப்பினர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் முன்மொழியப்படக்கூடிய அளவிற்கு உண்மை புதைந்து கிடக்கின்றது.”

மேலதிக தகவல்களுக்கு சிஏ சநந்திரபிரேமா தொடர்பான ஆவணக் கோவைகளை இந்த இணைப்பில் பார்க்கலாம்:

ஆவணக் கோவைகள்